டெல்டா விவசாயிகள் பாசனப் பணிகளை தொடங்க அறிவுறுத்தல் !

Delta Farmers

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனப் பணிகளை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

செப்டம்பர் 1 முதல் தண்ணீர் திறப்பு

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

நீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை

கிடைக்கக்கூடிய நீரை விவசாயிகள் சிக்கனமாகவும், திட்டமிட்ட முறையிலும் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மைத்துறை அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி சாகுபடி பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

கடைமடை வரை தண்ணீர் சென்றடைய நடவடிக்கை

மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைப்பாசன முறையை பின்பற்றி கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்யவும், கிடைக்கும் ஒவ்வொரு துளி நீரையும் அதிகபட்ச பாசனப் பயனுக்கு பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

விவசாயிகள் முன்னேற்பாடுகளை தொடங்க வேண்டும்

டெல்டா மாவட்ட விவசாயிகள் தண்ணீர் திறப்பை கருத்தில் கொண்டு தங்களது சாகுபடி மற்றும் பாசனப் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை விரைந்து தொடங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts