விளம்பரம்:


மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: மதுரைக்கு சிறப்பு பேருந்துகள்!!

Meenakshi Temple

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதிலும் இருந்து மதுரைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரையில் அதிகளவில் பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையிலும், பயணிகள் சிரமமின்றி வந்து செல்லும் வகையிலும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரம்:


சென்னையில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள்

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து செப்டம்பர் 16-ம் தேதி மதுரைக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுதவிர, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும் மதுரைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விளம்பரம்:


மாவட்ட வாரியாக பேருந்துகள்

கோயம்புத்தூர் – 30

திருப்பூர் – 30

ராமநாதபுரம் – 30

சிவகாசி – 30

ராஜபாளையம் – 30

தேனி – 30

அருப்புக்கோட்டை – 25

திண்டுக்கல் – 20

விருதுநகர் – 10

மதுரை சுற்றுவட்டார பகுதிகளிலும் சிறப்பு சேவை

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் எளிதாக மதுரையை வந்தடையும் வகையில், திருமங்கலம், மேலூர், திருப்புவனம், வாடிப்பட்டி, நத்தம், பூவந்தி மற்றும் உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து தலா 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பக்தர்களின் கூட்டம் மற்றும் பயணிகளின் தேவையைப் பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கவும் போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செப்டம்பர் 17-ம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களின் பாதுகாப்பான மற்றும் சிரமமில்லாத பயணத்தை உறுதி செய்யும் வகையில் இந்த சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts