விளம்பரம்:


loose Cooker Gasket solution: பிரஷர் குக்கர் ரப்பர் தளர்ந்துவிட்டதா? இந்த எளிய டிப்ஸை முயற்சி செய்யலாம் !!

Loose Cooker Gasket

சமையலறையில் தினசரி பயன்படுத்தப்படும் முக்கியமான சாதனங்களில் பிரஷர் குக்கரும் ஒன்று. குறைந்த நேரத்தில் உணவை சமைக்க உதவும் குக்கரில் சில நேரங்களில் கேஸ்கெட் எனப்படும் ரப்பர் தளர்வாகிவிடும். இதனால் குக்கர் மூடி சரியாகப் பொருந்தாமல், உள்ளே அழுத்தம் உருவாகுவதில் சிக்கல் ஏற்படலாம்.

இந்த பிரச்சினைக்கு வீட்டிலேயே எளிதாக முயற்சி செய்யக்கூடிய ஒரு டிப்ஸ் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

விளம்பரம்:


எப்படி சரி செய்வது?

முதலில் பிரஷர் குக்கரின் மூடியை அகற்றி, அதில் பொருத்தப்பட்டுள்ள ரப்பர் கேஸ்கெட்டை மெதுவாக வெளியே எடுக்க வேண்டும்.

பின்னர் அந்த ரப்பரை ஒரு கிண்ணம் தண்ணீரில் சிறிது நேரம் நனைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு தட்டில் வைத்திருக்கும் கோதுமை மாவில் (ஆட்டா) ரப்பரை நன்றாகத் தடவ வேண்டும்.

விளம்பரம்:


இதையடுத்து ரப்பரை மீண்டும் குக்கர் மூடியில் பொருத்தி மூடியை மூடிப் பார்க்கலாம். இவ்வாறு செய்வதால் தளர்ந்திருந்த ரப்பர் மீண்டும் இறுக்கமாகப் பொருந்த உதவும் என இந்த வைரல் ஹேக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃப்ரீசரில் வைக்கும் முறை

மற்றொரு முறையாக, தளர்ந்த கேஸ்கெட்டை சுமார் 10 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைத்து, பின்னர் எடுத்து உடனடியாக குக்கர் மூடியில் பொருத்தலாம். குளிர்ச்சியால் ரப்பர் தற்காலிகமாகச் சுருங்கி, மீண்டும் இறுக்கமாகப் பொருந்தக்கூடும்,

எப்போது புதிய கேஸ்கெட் வாங்க வேண்டும்?

கேஸ்கெட்டில் விரிசல், கிழிவு, அதிகப்படியான கடினத்தன்மை அல்லது வடிவ மாற்றம் ஏற்பட்டிருந்தால் அதை தொடர்ந்து பயன்படுத்தாமல் புதிய கேஸ்கெட்டை மாற்றுவது பாதுகாப்பானது.

புதிய கேஸ்கெட்டை பொருத்திய பிறகும் குக்கர் ஓரத்தில் இருந்து ஆவி வெளியேறினால், குக்கரை பயன்படுத்துவதைத் தவிர்த்து அதன் நிலையை சரிபார்க்க வேண்டும். பிரஷர் குக்கரில் பாதுகாப்பாக அழுத்தம் உருவாக கேஸ்கெட் முக்கியப் பங்கு வகிப்பதால், அதன் தரத்தில் சமரசம் செய்வதைத் தவிர்ப்பது அவசியம்

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts