விளம்பரம்:


முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து புறப்பட்டார் முதல்வர் விஜய் !!

CM Vijay

தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

ஒரு வார கால பயணம்

விளம்பரம்:


சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், துபாய் வழியாக லண்டன் செல்லும் வகையில் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவருடன் அரசு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளும் பயணித்துள்ளனர்.

இந்தப் பயணம் செப்டம்பர் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், செப்டம்பர் 17-ம் தேதி சென்னை திரும்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதலீட்டாளர்களுடன் சந்திப்பு

விளம்பரம்:


லண்டனில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் முதலீட்டாளர்களை முதல்வர் விஜய் சந்திக்க உள்ளார். தமிழ்நாட்டில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்கவும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் முதலீடுகளை விரிவுபடுத்தவும் அவர் அழைப்பு விடுக்க உள்ளார்.

குறிப்பாக மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல், தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை பார்வையிடுகிறார்

லண்டன் பயணத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, சில்வர்ஸ்டோனில் நடைபெறும் மோட்டார் பந்தயத்தை முதல்வர் விஜய் பார்வையிட உள்ளார். நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் இந்தப் போட்டியை விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக லே மான்ஸ் கோப்பை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில்வர்ஸ்டோன் வளாகத்தில் உள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், சுற்றுப்பாதை வடிவமைப்பு மற்றும் விளையாட்டுச் சுற்றுலா வாய்ப்புகள் குறித்தும் முதல்வர் விஜய் ஆய்வு செய்ய உள்ளார்.

இந்தப் பயணத்தின் மூலம் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிப்பதுடன், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் விளையாட்டுத் துறைகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts