விளம்பரம்:


விநாயகர் சதுர்த்தி: சென்னையில் இருந்து சிறப்பு ரெயில், பஸ்கள் இயக்கம் !

Special buses

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், சென்னையில் இருந்து சிறப்பு ரெயில் மற்றும் பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை மேற்கொண்டுள்ளன.

கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள்

விளம்பரம்:


சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  • செப்டம்பர் 10: 585 பேருந்துகள்
  • செப்டம்பர் 11: 1,255 பேருந்துகள்
  • செப்டம்பர் 12: 1,030 பேருந்துகள்
  • செப்டம்பர் 13: 650 பேருந்துகள்

கோயம்பேட்டில் இருந்தும் சிறப்பு சேவை

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

விளம்பரம்:


  • செப்டம்பர் 11: 240 பேருந்துகள்
  • செப்டம்பர் 12: 240 பேருந்துகள்
  • செப்டம்பர் 13: 105 பேருந்துகள்

மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பண்டிகை நெருங்குவதால் முன்பதிவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே பேருந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

பயணிகள் TNSTC இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் தங்களது பயணத்துக்கான முன்பதிவை மேற்கொள்ளலாம்.

இதேபோல், சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை – போத்தனூர் சிறப்பு ரெயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு சிறப்பு ரெயில் செப்டம்பர் 11ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

இதன் மறுமார்க்க ரெயில் செப்டம்பர் 14ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.25 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

தாம்பரம் – தென்காசி சிறப்பு ரெயில்

மற்றொரு சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 11ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, செப்டம்பர் 12ஆம் தேதி காலை 6.15 மணிக்கு தென்காசி சென்றடையும்.

மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து செப்டம்பர் 14ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரெயில், மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் நின்று செல்லும்.

முன்பதிவு எப்போது?

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 10ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்த கூடுதல் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts