‘Scene’ Title Teaser: நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ‘சூர்யா 47’ என குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்திற்கு ‘Scene’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் டைட்டில் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளதுழ
போலீஸ் அதிகாரியாக சூர்யா
டீசரில் சூர்யா டி.எஸ்.பி. இன்பராஜ் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது. வழக்கமான போலீஸ் கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்ட, வித்தியாசமான அணுகுமுறையுடன் இந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக டீசர் காட்சிகள் உணர்த்துகின்றன. ஆக்ஷன், காமெடி மற்றும் விறுவிறுப்பான காட்சிகளுடன் படம் உருவாகியுள்ளது.
முக்கிய நட்சத்திரங்கள்
சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார். மலையாள நடிகர் நஸ்லென் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். மேலும் லால், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார்.
தீபாவளிக்கு வெளியாகும் ‘Scene’
‘Scene’ திரைப்படம் 2026 நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசர் வெளியானதைத் தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

