Instagram-ல் தற்போது 1980களின் Retro Photo Trend வேகமாக வைரலாகி வருகிறது. இதில், தற்போதைய புகைப்படங்களை AI உதவியுடன் 1980களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் போல மாற்றி வருகின்றனர்.
சாதாரண Vintage Filter பயன்படுத்துவதைவிட, இந்த AI Trend-ல் ஆடை, ஹேர் ஸ்டைல், நகைகள், பின்னணி, லைட்டிங் மற்றும் புகைப்படத்தின் Film Texture ஆகியவை 80s காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றப்படுகின்றன. முகத்தின் அடையாளம் மற்றும் இயற்கையான தோற்றத்தை முடிந்தவரை அப்படியே வைத்துக்கொண்டு Retro Look உருவாக்குவது இந்த Trend-ன் முக்கிய அம்சமாகும்.
1980களின் Bollywood Studio Portrait, பழைய Family Album Photo, College Photo, Vintage Street Style என பல விதங்களில் இந்த Trend-ஐ முயற்சி செய்து வருகின்றனர். Instagram Stories-ல் “Add Yours” வசதியை பயன்படுத்தியும் பலர் இந்த Trend-ல் பங்கேற்று வருகின்றனர்.
80s புகைப்படங்கள் உருவாக்குவது எப்படி?
தற்போது சமூக வலைதளங்களில் 1980களின் தோற்றத்தில் புகைப்படங்களை உருவாக்கும் AI டிரெண்ட் வைரலாகி வருகிறது. நமது தற்போதைய புகைப்படத்தை 80களின் ஆடை, ஹேர்ஸ்டைல் மற்றும் சூழலுக்கு ஏற்ப எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
ChatGPT மூலம் 80s போட்டோ உருவாக்குவது எப்படி?
முதலில் ChatGPT செயலியை திறந்து புதிய Chat ஒன்றை தொடங்க வேண்டும். அதில் “What Would I Have Looked Like in the 80s?” என்ற Prompt-ஐ உள்ளிடலாம்.
அதன் பின்னர், தற்போதைய தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு 80s ஸ்டைல் புகைப்படத்தை உருவாக்க, புகைப்படத்தை பதிவேற்றுமாறு கேட்கப்படும். Chat Box-ல் உள்ள “+” குறியீட்டை தேர்வு செய்து, மாற்ற வேண்டிய புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும்.
தொடர்ந்து, புகைப்படம் எந்த வகையான 80s தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு Prompt கொடுக்கலாம். உதாரணமாக, 1980s Campus Style, Retro South Indian Aesthetic, Vintage College Vibes, Acid Wash Jeans, Vintage Tamil Cinema, Retro Fashion போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.
மேலும், விரும்பிய ஹேர்ஸ்டைல், உடைகள், பின்னணி, லைட்டிங், வாட்ச், செயின் உள்ளிட்ட அணிகலன்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு புகைப்படத்தை உருவாக்கலாம்.
உருவாக்கப்பட்ட புகைப்படத்தில் மாற்றங்கள் தேவைப்பட்டால், மீண்டும் தேவையான தகவல்களை Prompt-ல் குறிப்பிட்டு, நமக்கு பிடித்த வகையில் புகைப்படத்தை மாற்றிக் கொள்ளலாம்.
பிரபலங்களையும் கவர்ந்த 80s டிரெண்ட்
இந்த 80s புகைப்பட டிரெண்டில் சாமானியர்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்களும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட நடிகைகள் 80களின் காஸ்டியூம் மற்றும் ரெட்ரோ தோற்றத்தில் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
வைரலாகும் 80s AI Photo Prompts
1. 80s Indian Retro Look
Transform my uploaded photo into an authentic 1980s Indian portrait. Keep my facial features, identity and natural skin tone unchanged. Add an authentic 1980s hairstyle, vintage Indian outfit, classic accessories, warm lighting, soft focus and subtle analogue film grain. Make it look like a real photograph taken in India in the 1980s.
2. 80s Bollywood Hero/Heroine Look
Turn my photo into a glamorous 1980s Bollywood-style studio portrait. Keep my face and identity recognisable. Add authentic 1980s Indian fashion, retro hairstyle, statement accessories, cinematic studio lighting, soft focus and natural film grain. Make it photorealistic and nostalgic, like an old film magazine photograph.
3. Old Family Album Look
Convert this photo into a realistic 1980s Indian family album photograph. Preserve my face and natural expression. Use period-appropriate clothing, hairstyle and a simple home setting. Add warm natural lighting, slightly faded colours, analogue film grain and the texture of an old printed photograph.
4. 80s College Student Look
Recreate this photo as an authentic 1980s Indian college photograph. Keep my facial features and identity unchanged. Add period-accurate hairstyle, clothing and accessories, with an old college campus in the background. Use natural lighting, subtle film grain and realistic analogue-camera texture.
5. 80s Vintage Magazine Cover
Transform my uploaded photo into a glamorous 1980s Indian fashion magazine portrait. Keep my facial identity and features unchanged. Add authentic retro hairstyle, colourful 1980s fashion, statement jewellery, studio lighting and subtle analogue film grain. Make it look like a professionally photographed vintage magazine image.
இந்த Prompts-ல் “keep my facial features and identity unchanged”, “subtle analogue film grain”, “1980s Indian fashion” போன்ற குறிப்புகளை சேர்ப்பது Retro தோற்றத்தை இயல்பாக உருவாக்க உதவும்.

