விளம்பரம்:


Ajith Car race : ரேஸ் காரில் பயணித்த விஜய் – வைரல் வீடியோ !!

Vijay & Ajith

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் சந்திப்பு மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் பந்தய மைதானத்தில் நடைபெற்ற கார் பந்தய நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக் கொண்ட நிலையில், அதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

தமிழக முதல்வர் விஜய், இங்கிலாந்து பயணத்தின்போது சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற Michelin Le Mans Cup பந்தய நிகழ்ச்சியில் பங்கேற்றார். நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் தனது அணியுடன் இந்தப் போட்டியில் கலந்து கொண்டார். போட்டியை தொடங்கி வைக்கும் சிறப்பு நிகழ்விலும் விஜய் பங்கேற்றார்.

விளம்பரம்:


அஜித்துடன் விஜய்

பந்தய மைதானத்தில் அஜித்தை சந்தித்த விஜய் அவரை ஆரத்தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இருவரும் நீண்ட நேரம் நட்புடன் உரையாடிய காட்சிகளும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அஜித் பங்கேற்ற ரேஸ் காரில் விஜய் பயணித்த காட்சிகளும் தற்போது கவனம் பெற்றுள்ளன. கார் பந்தயத்தின் சூழல், ரேசிங் கார்கள் மற்றும் அஜித்துடனான விஜய்யின் சந்திப்பு உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்:


பரிசுகளை பரிமாறிய விஜய் – அஜித்

இந்த சந்திப்பின்போது விஜய், அஜித்துக்கு சிறிய ரேஸ் கார் மாதிரி ஒன்றை பரிசாக வழங்கினார். அதற்கு பதிலாக அஜித் தனது கையெழுத்திட்ட ஹெல்மெட்டை விஜய்க்கு வழங்கினார். இருவரும் பரிசுகளை பரிமாறிக்கொண்ட காட்சிகளும் ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளன.

பல ஆண்டுகளாக இருவரது ரசிகர்களிடையே காணப்பட்ட போட்டி மனப்பான்மைக்கு மாறாக, விஜய் – அஜித் நேரில் சந்தித்து நட்புடன் பழகிய இந்த தருணங்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில், சில்வர்ஸ்டோன் நிகழ்ச்சியில் நடிகை திரிஷாவும் கலந்து கொண்டது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் பரவி வருகின்றன.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts