கர்நாடக மாநிலம் பெலகாவி நகரின் சவத் காலி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென பிரிட்ஜ் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பிரிட்ஜ் வெடித்ததைத் தொடர்ந்து வீடு முழுவதும் தீ வேகமாகப் பரவியது. இதனால் வீட்டிற்குள் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
விளம்பரம்:
இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக ஏற்பட்ட அதிகப்படியான மின்அழுத்தத்தால் வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும், தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

