விளம்பரம்:


தமிழகத்தில் ரூ.15,300 கோடி முதலீடு: 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்!!

TN Investments

தமிழக முதல்-அமைச்சர் விஜயின் இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதியாக, லண்டனில் தமிழகத்திற்கு ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை அமைத்து விரிவுபடுத்தும் நோக்கில், முன்னணி சர்வதேச நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விளம்பரம்:


மதர்சன் குழுமம் ரூ.11,000 கோடி

மதர்சன் குழுமம் சுமார் ரூ.11,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடத் துறைகளில் மேற்கொள்ளப்படும் இந்த முதலீட்டின் மூலம் சுமார் 7,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,000 கோடியில் உலகளாவிய திறன் மையம்

விளம்பரம்:


மேலும், ஒரு சர்வதேச நிறுவனத்திற்காக சென்னையில் சுமார் ரூ.1,000 கோடி முதலீட்டில் உலகளாவிய திறன் மையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 2,000-க்கும் மேற்பட்ட உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி நிறுவனமும் சென்னை மற்றும் திருச்சியில் தனது உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்த உள்ளது. இதன் மூலம் மேலும் 600 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு

இங்கிலாந்தைச் சேர்ந்த வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் சுமார் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இதுதவிர, ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னணி வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளவுள்ள ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழகத்தை தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த முதலீடுகள் மூலம் தமிழகத்தின் உற்பத்தி, தொழில்நுட்பம், மின்சார உபகரணங்கள் மற்றும் வாகன உதிரிபாகத் துறைகளில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts