விளம்பரம்:

சென்னையின் 2-வது விமான நிலையம்: செய்யூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்கள் பரிசீலனை

Chennais Second Airport

சென்னையின் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, நகருக்கான 2-வது விமான நிலையத்தை அமைப்பதற்கான இடங்களை தமிழக அரசு மீண்டும் ஆய்வு செய்து வருகிறது.

இதற்காக செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மணலூர் ஆகிய இரண்டு பகுதிகளை தமிழக அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்:

முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற எதிர்ப்புகள் தொடர்ந்து எழுந்ததைத் தொடர்ந்து, அந்தத் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. இதையடுத்து புதிய இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின.

பரந்தூருக்கு மாற்றாக புதிய இடங்கள்

அதன் ஒரு பகுதியாக செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள மணலூர் பகுதிகளில் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமான TIDCO சார்பில் முதற்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த இரு இடங்களிலும் விரிவான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் (AAI) தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

விளம்பரம்:

செய்யூர் பகுதி தற்போதைய சென்னை விமான நிலையத்திலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது. அதேபோல், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள மணலூர் பகுதி சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இரு இடங்களிலும் சில சவால்கள் இருப்பதாக கூறப்படுகிறது. செய்யூர் பகுதியில் விமானப்படையின் வான்வெளி கட்டுப்பாடுகள் தொடர்பான அனுமதிகள் தேவைப்படலாம். மணலூர் பகுதி ஸ்ரீஹரிகோட்டா அருகே அமைந்திருப்பதால், அப்பகுதியிலும் பாதுகாப்பு மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இறுதி முடிவு எப்போது?

அடுத்தகட்டமாக AAI அதிகாரிகள் இரண்டு இடங்களையும் நேரில் ஆய்வு செய்து சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்க உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான இறுதி இடம் தேர்வு செய்யப்படும்.

சென்னையின் தற்போதைய விமான நிலையத்தின் மீது அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் விமானப் போக்குவரத்து அழுத்தத்தை சமாளிக்க, புதிய பசுமைவெளி விமான நிலையம் முக்கியமான உள்கட்டமைப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது. எனவே, மாற்று இடங்களில் எந்தப் பகுதி இறுதியாக தேர்வு செய்யப்படுகிறது என்பது அடுத்தகட்டத்தில் முக்கியத்துவம் பெறும்.

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts