டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்களின் பட்டியலில் முதலிடம் பிரதமர் மோடி!

டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்களின் பட்டியலில் முதலிடம் பிரதமர் மோடி!

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க விரும்பும் உலகத் தலைவர்களின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் இருப்பார் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதலிடம்

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் செர்ஜியோ கோர், டிரம்ப்பை சந்திக்க 35 உலகத் தலைவர்கள் வருவதாகக் கூறி, அவர்களில் யாரை முதலில் சந்திக்க விரும்புகிறார் என்று கேட்டால், அந்தப் பட்டியலில் பிரதமர் மோடிதான் முதலிடத்தில் இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:

மேலும், அதிபர் டிரம்ப்பிடம் பேசும்போதெல்லாம் இந்தியாவுக்கான தனது பயணத்தையும், பிரதமர் மோடியுடனான நட்பையும் அவர் நினைவுகூருவதாக செர்ஜியோ கோர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு இந்தியா வருவாரா டிரம்ப்?

“காத்திருங்கள். என்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும். அதற்குள் அடுத்த ஆண்டு வந்துவிடும்” என்று செர்ஜியோ கோர் தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், அடுத்த ஆண்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்தியப் பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியதாக செய்தியில் குறிப்பிடப்படவில்லை.

விளம்பரம்:

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா நம்பிக்கைக்குரிய நாடு

இந்தியா-அமெரிக்க உறவு வர்த்தகத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையும் முக்கியமானது என்றும் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் ராணுவ உபகரணங்களை வழங்குவதில்லை என்றும், நம்பிக்கைக்குரிய நாடுகளுக்கு மட்டுமே வழங்குகிறது என்றும், அந்த நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:

விளம்பரம்:

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts