விளம்பரம்:


MK Stalin | வைரஸ் காய்ச்சல்.. வீட்டில் ஓய்வெடுக்கும் மு.க.ஸ்டாலின் !!

MK Stalin

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

முப்பெரும் விழா ஒத்திவைப்பு

விளம்பரம்:


தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநாளையொட்டி பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடக்க நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா சென்னையில் நடைபெறுவதாக இருந்த நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து விழாவும் ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின் பதிவு

தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், தன்னை அன்புடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:


வைரஸ் தொற்றால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருவதாகவும், இதன் காரணமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த சில நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், முப்பெரும் விழாவுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு நன்றி

தனது உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விசாரித்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர்கள் காட்டிய அன்புக்கும் அக்கறைக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஓய்வு

மருத்துவர்களின் அறிவுரைப்படி மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், செப்டம்பர் 17-ம் தேதி பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடக்க நாளை கட்சியினர் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அன்றைய தினம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், தலைமைக் கழகம் அறிவித்துள்ள சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கட்சி அலுவலகங்களிலும் ஏற்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தி.மு.க.வின் 78-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி கட்சி கொடிகளைப் புதுப்பித்து ஏற்றுமாறும் கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts