விளம்பரம்:


முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனை !!

Anbil Mahesh

சென்னை மற்றும் திருச்சியில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி வீட்டில் சோதனை

விளம்பரம்:


திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வீட்டில் இன்று காலை முதல் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதவிர சென்னை மற்றும் திருச்சியில் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் சில இடங்களிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக புகார்

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம், பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான அனுமதி, கட்டிட திட்ட அனுமதி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ ஒப்புதல்களை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

விளம்பரம்:


இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத அமைப்பை நடத்தி வந்ததாகக் கூறப்படும் பி.டி. அரசகுமார் என்பவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை தீவிரம்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பான பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தற்போது அன்பில் மகேஸ் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சோதனையின் முடிவில் கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சோதனை மற்றும் விசாரணை தொடர்பான முழுமையான விவரங்கள் போலீசாரின் அதிகாரப்பூர்வ தகவலுக்குப் பின்னர் தெரியவரும்.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts