விளம்பரம்:


ஓட்டுநர் உரிமத்தில் புதிய மாற்றங்கள்: செல்போன் எண், ரத்த வகை கட்டாயம்!

Driving Licence Rules

இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்களை முன்மொழிந்து வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமத்தில் இடம்பெற வேண்டிய விவரங்கள்

விளம்பரம்:


புதிய முன்மொழிவின்படி, ஓட்டுநர் உரிமத்தில் உரிமையாளரின் ரத்த வகை, செல்போன் எண் மற்றும் அவசரக் காலத்தில் தொடர்புகொள்ள வேண்டிய நபர்களின் விவரங்கள் கட்டாயமாக இடம்பெற வேண்டும். விபத்து போன்ற அவசரச் சூழல்களில் உரிய தகவல்களைப் பெறுவதற்கு இந்த விவரங்கள் உதவியாக இருக்கும்.

இந்தியர்கள், வெளிநாட்டவர்களுக்கு தனித்தனி நிறங்கள்

ஓட்டுநர் உரிமம் வழங்குவதிலும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஓட்டுநர் உரிமங்களில் தனித்தனி வண்ணக் குறியீடுகளைப் பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

விளம்பரம்:


ஓட்டுநர் பயிற்சித் தேர்வில் மாற்றம்

பாதுகாப்பான ஓட்டுநர் பயிற்சி மதிப்பீட்டில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. மேலும், இணையவழிப் பாதுகாப்பான ஓட்டுநர் பயிற்சி குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடைபெற வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

ஆதார் மூலம் ஆன்லைன் சேவைகளுக்குக் கட்டணச் சலுகை

ஆதார் அடிப்படையிலான இணையவழிச் சரிபார்ப்பைப் பயன்படுத்தி, பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட குறிப்பிட்ட ஓட்டுநர் உரிம விவரங்களை மாற்றும் சேவைகளுக்கான கட்டணங்களைத் தள்ளுபடி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், ஓட்டுநர் உரிம விவரங்களை மாற்றுவதற்கான விண்ணப்பங்களை 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும் என்றும், நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அனைத்தும் தற்போது முன்மொழிவுகளாகவே உள்ளன. வரைவு அறிவிப்பின் மீது பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினர் கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இறுதி விதிகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த பின்னரே இந்த மாற்றங்கள் அமலாகும்.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts