விளம்பரம்:


பள்ளி மாணவர்களுக்கு 5.32 லட்சம் நவீன சைக்கிள்கள்! டெண்டரை வென்ற ஹீரோ நிறுவனம் !!

Bicycles

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், சைக்கிள்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. குறைந்த விலையைச் சமர்ப்பித்ததால் இந்நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

5.32 லட்சம் சைக்கிள்கள் கொள்முதல்

விளம்பரம்:


தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்விப் பயணத்தை எளிதாக்கும் நோக்கில் நவீன சைக்கிள்கள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026–27ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்தச் சைக்கிள்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக மொத்தம் 5,32,388 சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில் 2,37,133 சைக்கிள்கள் மாணவர்களுக்கும், 2,95,255 சைக்கிள்கள் மாணவிகளுக்கும் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களுக்கு ரூ.7,235; மாணவிகளுக்கு ரூ.7,476

விளம்பரம்:


ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலையின்படி, வரிகள் உட்பட ஒரு சைக்கிளின் விலை மாணவர்களுக்கு ரூ.7,235 ஆகவும், மாணவிகளுக்கு ரூ.7,476 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலையில் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டால், திட்டத்தின் மொத்தச் செலவு சுமார் ரூ.392 கோடியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே பட்ஜெட்டில் ரூ.277 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக சுமார் ரூ.115 கோடி தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெல்மெட், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்படும்

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சைக்கிள்களுடன் ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சைக்கிள்கள் குறிப்பிட்ட தரநிலைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட வேண்டும் என ஒப்பந்த நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நாளிலிருந்து 150 நாட்களுக்குள் சைக்கிள்கள் மற்றும் அதனுடன் வழங்கப்படும் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை

திட்டத்திற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயனடைவார்கள்.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts