விளம்பரம்:


2 தொகுதி இடைத்தேர்தல்: தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்பு !!

TN By-Elections

தமிழகத்தில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் 5 முனைப் போட்டி நிலவுகிறது.

99 வேட்புமனுக்கள் தாக்கல்

விளம்பரம்:


இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இரு தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 99 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் பிரதான கட்சிகள், மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 39 வேட்பாளர்கள் 51 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மதுராந்தகம் தொகுதி

விளம்பரம்:


மதுராந்தகத்தில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தாராபுரம் தொகுதி

தாராபுரத்தில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.

இதனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளனர்

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts