விளம்பரம்:


அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்! முதல்வர் விஜய் அறிவிப்பு !!

Diwali Bonus

தமிழகத்தில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2025–26ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தகுதியுள்ள ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 20 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது.

எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ்?

விளம்பரம்:


தமிழக அரசின் அறிவிப்பின்படி, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் பணிப்பிரிவைப் பொறுத்து போனஸ் வழங்கப்படும்.

20% வரை போனஸ்: லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுள்ள ‘C’ மற்றும் ‘D’ பிரிவு ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% வரை வழங்கப்படும்.

மின்சாரம், போக்குவரத்து மற்றும் ஆவின்: தகுதியுள்ள ஊழியர்களுக்கு மொத்தம் 20% மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

விளம்பரம்:


10% போனஸ்: ஒதுக்கக்கூடிய உபரித் தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மற்றும் 1.67% கருணைத் தொகை வழங்கப்படும்.

வீட்டுவசதி மற்றும் குடிநீர் வாரியங்கள்: குறிப்பிட்ட வாரியங்களில் பணிபுரியும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட விகிதங்களின்படி தொகை வழங்கப்படும்.

தற்காலிகத் தொழிலாளர்கள்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகை வழங்கப்படும்.

எவ்வளவு தொகை கிடைக்கும்?

அரசின் அறிவிப்பின்படி, மிகை ஊதியம் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,400 முதல் அதிகபட்சம் ரூ.16,800 வரை கிடைக்கும். இந்தத் தொகை ஊழியர்களின் தகுதி மற்றும் சம்பளக் கணக்கீட்டு விதிகளுக்கு ஏற்ப மாறுபடும்.

எத்தனை ஊழியர்கள் பயனடைவார்கள்?

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,60,497 தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.367.20 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்பட உள்ளது. கூட்டுறவு அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான உத்தரவுகள் தனியாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts