விளம்பரம்:

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நாளை மீண்டும் கூடுகிறது: தமிழகத்தின் கோரிக்கை என்ன?

Cauvery River India காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நாளை மீண்டும் கூடுகிறது: தமிழகத்தின் கோரிக்கை என்ன?

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நாளை மீண்டும் கூடுகிறது: தமிழகத்தின் கோரிக்கை என்ன?

தமிழகம்–கர்நாடகம் இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்னை நீடித்து வரும் நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 57-ஆவது கூட்டம் தில்லியில் நாளை (செப்டம்பர் 8) நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்:

காவிரி நீர் திறப்பு குறித்து ஆலோசனை

கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56-ஆவது கூட்டத்தில், தமிழகத்துக்கு கர்நாடகம் அடுத்த 15 நாள்களுக்கு வினாடிக்கு 9,000 கன அடி வீதம் காவிரி நீரைத் திறந்துவிட உத்தரவிடப்பட்டது.

நிலுவை நீரை வழங்கவில்லை என தமிழக அரசு புகார்

ஆணையத்தின் உத்தரவின்படி கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை நீரைத் திறந்துவிடவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விளம்பரம்:

இதையடுத்து, ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் வாதம்

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தனது தரப்பு கருத்துகளை முழுமையாகக் கேட்காமல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவுகளைப் பிறப்பித்ததாக தெரிவித்தது.

கர்நாடகம் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய நிலுவை நீரை வழங்கவில்லை என்றும், கர்நாடகத்தில் அதன் நீர்ப்பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு ஏக்கர் நிலத்துக்குக்கூட நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஆகஸ்ட் 31-ல் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை முழுமையாகப் பரிசீலித்த பிறகே காவிரி நீர் மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என ஆகஸ்ட் 31-ஆம் தேதி அறிவுறுத்தியது.

இதன் தொடர்ச்சியாக நடைபெற உள்ள செப்டம்பர் 8-ஆம் தேதி கூட்டம், தமிழகத்துக்கான காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts