விளம்பரம்:


நாங்குநேரியில் சொத்து தகராறு: 75 வயது தாத்தாவை அரிவாளால் வெட்டிக்கொன்ற பேரன் – போலீசார் அதிரடி கைது!

Nanguneri Property Dispute News Graphic நாங்குநேரியில் சொத்து தகராறு: 75 வயது தாத்தாவை அரிவாளால் வெட்டிக்கொன்ற பேரன் – போலீசார் அதிரடி கைது!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சொத்து தகராறு காரணமாக 75 வயது முதியவரை அவரது பேரனே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சொத்து தகராறால் ஏற்பட்ட முன்விரோதம்

நாங்குநேரி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தளவாய் (75). இவரது மனைவி பெருமாள்தாய். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.

இவர்களது மூத்த மகளின் மகனான கிருஷ்ணராஜா (20) என்பவருக்கும், தளவாய்க்கும் இடையே சொத்து தொடர்பாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

அதிகாலையில் அரிவாளால் சரமாரி வெட்டு

இந்நிலையில், இன்று அதிகாலை தளவாய் நாங்குநேரி அண்ணா சாலையில் பால் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

விளம்பரம்:


அப்போது அங்கு வந்த கிருஷ்ணராஜாவுக்கும், தளவாய்க்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணராஜா, தான் வைத்திருந்த அரிவாளால் தளவாயின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த தளவாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கிருஷ்ணராஜா அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பேரனை கைது செய்த போலீசார்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாங்குநேரி டி.எஸ்.பி. சதீஷ் கண்ணா, இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

விளம்பரம்:


பின்னர் தளவாயின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தப்பிச் சென்ற கிருஷ்ணராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்து தகராறு காரணமாக பேரனே தாத்தாவைக் கொலை செய்த சம்பவம் நாங்குநேரி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts