வரலாறு காணாத அளவில் ரயில் விபத்துகள் குறைவு!

வரலாறு காணாத அளவில் ரயில் விபத்துகள் குறைவு: பாஜக வெளியிட்ட புள்ளிவிவரம்! 

சென்னை, ஆக.7:

இந்தியாவில் ரயில் விபத்துகள் வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளதாக பாஜக சார்பில் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

அதன்படி, 2005-06ஆம் ஆண்டில் 234 ஆக இருந்த ரயில் விபத்துகள், 2009-10ல் 165 ஆகவும், 2014-15ல் 135 ஆகவும் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 2019-20ல் 55 ஆகவும், 2024-25ல் 31 ஆகவும் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்தப் புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2025-26ஆம் ஆண்டில் 16 ரயில் விபத்துகளாக குறைந்ததாகவும், 2026-27 நிதியாண்டில் ஜூலை 2026 வரையிலான காலகட்டத்தில் 2 விபத்துகள் மட்டுமே பதிவாகி யுள்ளதாகவும் பாஜக வெளியிட்டுள்ள தகவலில் கூறப் பட்டுள்ளது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ், இந்திய ரயில்வேயில் பாதுகாப்பு நடவடிக்கைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts