தனது இயல்பான நடிப்பு மற்றும் ஹோம்லி லுக் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சாய் பல்லவி, அமரன் பட வெற்றிக்கு பிறகு தமிழில் தொடர்ந்து புதிய வாய்ப்புகள் பெற்று வருகிறார்.
சமீபத்தில் ரஜினி–கமல் இணையும் படத்தில் அவர் நடிக்கலாம் என்ற தகவல் பரவியிருந்தாலும், அதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.
மணிரத்னம் படத்தில் சாய் பல்லவி?
தற்போது வெளியாகும் தகவலின்படி, இயக்குநர் மணிரத்னம் இயக்கும் தனது அடுத்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாகவும் படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த கதாபாத்திரத்திற்காக சாய் பல்லவி ஏற்கனவே போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
பட அறிவிப்பு எப்போது?
2026 ஜனவரி மாதத்தில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் வாய்ப்பும் உள்ளது.

