மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தனா நடித்த ‘புஷ்பா 2: தி ரூல்’ கடந்த ஆண்டு திரைக்கு வந்தது. சுகுமார் இயக்கிய முதல் பாகம் சாதித்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை வழங்கினர்.
அல்லு அர்ஜுனின் மாஸ் நடிப்பு, ராஷ்மிகாவின் கவர்ச்சியான தோற்றம், அதிரடி சண்டை காட்சிகள் என படத்தின் அனைத்து அம்சங்களும் பார்வையாளர்களை கவர, படம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
விளம்பரம்:
செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள்
முதல் நாள் வசூல்: உலகளவில் ₹294 கோடிக்கு மேல்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி – அனைத்து மொழிகளிலும் வலுவான வசூல்
ரிலீஸ் ஆகி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், படத்தின் மொத்த வசூல்: ₹1881 கோடி
இந்த வசூல் சாதனையால் ‘புஷ்பா 2’ Industry Hit பட்டத்தை பெற்றுள்ளது.

