இந்திய ரயில்வேயில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 3,548 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பணிகளுக்கு தகுதியுள்ள பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க நவம்பர் 6ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3,548 காலிப் பணியிடங்கள்
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ள CEN 06/2026 அறிவிப்பின்படி, பட்டதாரி நிலையில் உள்ள NTPC பணிகளுக்கு மொத்தம் 3,548 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணியிடங்களின் விவரம்:
- Goods Train Manager – 2,750 பணியிடங்கள்
- Senior Clerk Cum Typist – 371 பணியிடங்கள்
- Junior Accounts Assistant Cum Typist – 300 பணியிடங்கள்
- Chief Commercial Cum Ticket Supervisor – 127 பணியிடங்கள்
மொத்தம் 3,548 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி என்ன?
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பணிகளுக்கு ஏற்ப கூடுதல் தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கலாம். எனவே விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைச் சரிபார்க்க வேண்டும்.
வயது வரம்பு
2027 ஜனவரி 1ஆம் தேதியின்படி விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி தகுதியுள்ள இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
மாதச் சம்பளம் எவ்வளவு?
இந்தப் பணிகளுக்கு 7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
- Chief Commercial Cum Ticket Supervisor – ரூ.35,400
- Goods Train Manager – ரூ.29,200
- Junior Accounts Assistant Cum Typist – ரூ.29,200
- Senior Clerk Cum Typist – ரூ.29,200
இவை ஆரம்ப அடிப்படைச் சம்பளமாகும். இதனுடன் அரசு விதிகளின்படி இதர படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு நடைமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- முதல்நிலை கணினி வழித் தேர்வு (CBT 1)
- இரண்டாம் நிலை கணினி வழித் தேர்வு (CBT 2)
- சான்றிதழ் சரிபார்ப்பு
- மருத்துவப் பரிசோதனை
இந்த அறிவிப்பின்படி குறிப்பிட்ட இரண்டு Typist பணிகளுக்கும் கணினி வழி தட்டச்சுத் திறன் தேர்வு (CBTST) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பணியில் சேர்ந்த பிறகு அடிப்படை கணினி மற்றும் தட்டச்சுத் திறன் மதிப்பிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாள்: அக்டோபர் 8, 2026
- விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 6, 2026
- தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: நவம்பர் 8, 2026
- விண்ணப்பத்தில் திருத்தம் செய்யும் காலம்: நவம்பர் 9 முதல் 18 வரை
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் இணையதளம்: https://www.rrbapply.gov.in
விண்ணப்பிக்கும் முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு, பணியிட விவரங்கள் மற்றும் தேர்வு நடைமுறைகளை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
நவம்பர் 6ஆம் தேதி விண்ணப்பிக்கக் கடைசி நாள் என்பதால், தகுதியுள்ள பட்டதாரிகள் காலதாமதமின்றி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

