விளம்பரம்:


Power Shortage | இந்தியா முழுவதும் மின் தட்டுப்பாடு! தமிழகத்தில் மட்டும் இல்லை – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

Power Shortage

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது மின்சாரப் பற்றாக்குறை Power Shortage நிலவி வருவதாக தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் நிலவும் மின்சாரப் பிரச்சினை மற்றும் மின்வெட்டு தொடர்பான சர்ச்சைகள் குறித்துப் பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார்.

விளம்பரம்:


தேவர் குருபூஜையில் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், ராஜீவ், மதன் ராஜா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

சிறைகளில் பாதுகாப்புக் குறைபாடுகள்!

விளம்பரம்:


தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறைகளிலும் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் இருப்பதாக அமைச்சர் ஒப்புக்கொண்டார். தேனி சிறையில் கதவுகளைப் பூட்டும் நடைமுறையில் இருந்த குளறுபடியைப் பயன்படுத்திக் கைதிகள் தப்பிச் சென்றதாகக் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தில் சிறைத்துறை கண்காணிப்பாளருக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். சிறைகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஏற்கெனவே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், குறைபாடுகள் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் கூறினார்.

மீனாட்சி அம்மன் கோயிலில் மின்தடை ஏன்?

Power Shortage

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரிசனத்தின்போது ஏற்பட்ட மின்தடை குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார்.

முக்கியப் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கோயிலில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகக் கூறினார். அப்போது மின் இணைப்பை மாற்றியபோது மட்டுமே சில நிமிடங்கள் மின்தடை ஏற்பட்டதாகவும், மற்றபடி மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், மின்துறையில் உள்ள சிலர் வேண்டுமென்றே முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின்போது மின்தடையை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். இது தொடர்பாகப் பொறுப்பில் இருப்பதால் அதிகம் பேச முடியாது என்றும் கூறினார்.

இந்தியா முழுவதும் மின் தட்டுப்பாடு!

தமிழகத்தில் மின்சாரத் தேவையைச் சமாளிப்பதற்காக அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதாக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், இதுவரை அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும், அதற்கான டெண்டர் மட்டுமே கோரப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

மேலும், அடுத்த வாரமும் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான புதிய டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் கூட்டணி அமைத்துச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், மின்சாரப் பற்றாக்குறை என்பது தமிழ்நாட்டில் மட்டுமே உள்ள பிரச்சினை அல்ல; இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மின்சாரத் தட்டுப்பாடும் மின்வெட்டும் நிலவுவதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தின் மின்சாரத் தேவையைச் சமாளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts