விளம்பரம்:


வங்கக்கடலில் உருவாகும் அர்னாப் புயல்: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Cyclone Arnab Alert

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, அர்னாப் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்:


Cyclone Arnab Alert To TN Rain 

அக்டோபர் 26-ல் புயலாக வலுப்பெற வாய்ப்பு

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்தடுத்த நிலைகளில் வலுப்பெற்று வருகிறது. இது அக்டோபர் 26-ஆம் தேதி காலைக்குள் புயலாக மாறக்கூடும் என்றும், அக்டோபர் 27-ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், அக்டோபர் 28-ஆம் தேதி ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதிகளை நெருங்கக்கூடும். அப்போது அதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்:


தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

புயல் உருவாகும் சூழலில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 5 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கையுடன் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அக்டோபர் 26-ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

புயல் தொடர்பான வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதுடன், அதிகாரிகள் வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts