விளம்பரம்:


புதுக்கோட்டையில் முதல்வர் விஜய் 20 கி.மீ. சாலை வலம் செல்ல திட்டம்!

Vijays Pudukkottai Roadshow Rally புதுக்கோட்டையில் முதல்வர் விஜய் 20 கி.மீ. சாலை வலம் செல்ல திட்டம்!

புதுக்கோட்டையில் முதல்வர் விஜய் 20 கி.மீ. சாலை வலம் செல்ல திட்டம்!

விராலிமலை வழியாக புதுக்கோட்டைக்குச் செல்லும் முதல்வர் – பயணத் திட்டத்தில் மாற்றம் எனத் தகவல்

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், நாளை (நவம்பர் 2) புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள நிலையில், அவரது பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளம்பரம்:


முதல்வரான பிறகு முதன்முறையாக புதுக்கோட்டைக்கு விஜய் செல்லவுள்ளார். அங்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தைத் திறந்து வைப்பதுடன், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்க உள்ளார்.

ஹெலிகாப்டர் பயணத்துக்குப் பதிலாக சாலைப் பயணம்?

முதலில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்குச் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், முதல்வரின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளம்பரம்:


அதன்படி, திருச்சியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக மாத்தூர், மண்டையூர், கீரனூர் ஆகிய பகுதிகளைக் கடந்து புதுக்கோட்டைக்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

20 கி.மீ. தொலைவுக்கு சாலை வலம்

புதுக்கோட்டை செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு முதல்வர் விஜய் சாலை வலம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முதல்வரின் வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts