விளம்பரம்:


காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர மனு!

Cauvery row

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடியுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை எனக் கூறி, அவசர மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறைந்த அளவில் மட்டுமே நீர் திறப்பு

விளம்பரம்:


கடந்த 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையிலான நான்கு நாட்களில், தமிழகத்திற்கு மிகக் குறைந்த அளவிலேயே காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் மொத்தமாக 3,851 கன அடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

கர்நாடகாவின் நீர் தேவை குறித்து தமிழக அரசு கேள்வி

பெங்களூருவின் அடுத்த ஏழு மாத குடிநீர் தேவைக்கு அதிகபட்சமாக 14 டி.எம்.சி. நீரே தேவைப்படும் நிலையில், கர்நாடகா 43 டி.எம்.சி. தேவைப்படுவதாக கூறுவது தமிழகத்துக்கான நீர் பங்கை மறுப்பதற்கான காரணமாக இருப்பதாக தமிழக அரசு மனுவில் தெரிவித்துள்ளது.

விளம்பரம்:


வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையிலும், ஜனவரி மாதம் வரை தமிழகத்தின் பயிர்களை பாதுகாக்க பிலிகுண்டுலுவுக்கு உரிய அளவு நீர் வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

3,851 கன அடி நிலுவை நீரை வழங்க கோரிக்கை

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து பின்பற்றாதது சட்டப்பூர்வ கடமையை மீறுவதாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே, நிலுவையில் உள்ள 3,851 கன அடி நீரை உடனடியாக திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 6 வரை தினமும் 3,000 கன அடி

மேலும், நவம்பர் 6-ம் தேதி வரை தினமும் 3,000 கன அடி நீர் பிலிகுண்டுலுவுக்கு வந்து சேருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தனது மனுவில் கோரியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முந்தைய உத்தரவையும் மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

 

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts