விளம்பரம்:


தேனி சிறையில் அதிர்ச்சி! 17 விசாரணைக் கைதிகள் தப்பியோட்டம் !!

Undertrials Escape

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் இருந்து ஒரே நேரத்தில் 17 விசாரணைக் கைதிகள் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு கைதிகள் தப்பிச் சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிப்பு வந்ததாக நாடகம்?

விளம்பரம்:


திங்கள்கிழமை இரவு சிறையில் இருந்த கைதி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறி சத்தம் எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து உதவுவதற்காக சிறைக் காவலர்கள் அந்த அறைக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காவலர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

17 தனிப்படைகள் அமைப்பு

விளம்பரம்:


சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தப்பிய கைதிகளை பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தேனி மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை மற்றும் கேரள எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

13 பேர் மீண்டும் கைது

தீவிர தேடுதல் வேட்டையின் மூலம் தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 கைதிகளை பிடிப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேடுதல் பணியில் ட்ரோன்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப உதவிகளும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 சிறைத்துறை ஊழியர்கள் சஸ்பெண்ட்

சம்பவம் தொடர்பாக சிறைத்துறை டி.ஜி.பி. ஆய்வு மேற்கொண்ட நிலையில், பாதுகாப்புப் பணியில் ஏற்பட்ட மனிதத் தவறே கைதிகள் தப்பியதற்கு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பணியில் இருந்த 9 சிறைத்துறை ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடரும் விசாரணை

ஒரே நேரத்தில் 17 விசாரணைக் கைதிகள் சிறையில் இருந்து தப்பிய சம்பவம் குறித்து போலீசாரும் சிறைத்துறையும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதிகள் தப்பிய விதம், பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts