முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஐரோப்பிய நாடுகளுக்குப் புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
குறிப்பாக தமது வெளிநாட்டுப் பயணம் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை விமர்சித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது எப்படி வெளிநாடுகளுக்குச் சென்றாரோ, அப்படிதானே நானும் செல்வேன் என்றார். ஒருவேளை, அவரதுப் பயணத்தைப் போல எனது பயணமும் இருக்கும் என்று எடப்பாடி எண்ணுகிறாரோ என்று விமர்சித்த ஸ்டாலின், தனது கையெழுத்தின் மூலம் பல ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்றார்.
தேர்தல் ஆணையம் உட்பட யார் எப்படிப்பட்ட சதிகளைச் செய்தாலும் அவற்றை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டு. ஏன்; பீகார் மாநிலத்திலும் தேர்தல் ஆணையம் நினைத்தது நடக்காது. அங்கேயும் மக்களை எழுச்சிப் பெற வைக்க, தேர்தல் ஆணையம் உதவியிருக்கிறது என்பதே உண்மை என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
தி.மு.க. கூட்டணிக்குப் புதிய கட்சிகள் வருகின்றனவோ; இல்லையோ தி.மு.க.,வை நோக்கிப் புதிய வாக்காளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் -ஸ்டாலின்
தேர்தல் கருத்துக் கணிப்புகள் எப்படி இருந்தாலும், தி.மு.க. கூட்டணி தான் அமோக வெற்றிபெறும் என்று கூறிய ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் பற்றி பேச மறுத்துவிட்டு, பேச்சைக் குறைத்து செயலில் காட்டுகிறேன் எனக் கூறி விடைபெற்றுச் சென்றார்.
இதையும் படிங்க: ஐரோப்பா, இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார் மு.க.ஸ்டாலின்!
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.