விளம்பரம்:


தமிழகத்தைச் சேர்ந்த 2 காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசின் தக்ஷதா பதக்கம்! 2026-ம் ஆண்டுக்கான விருது அறிவிப்பு !!

Dakshata Padak

தமிழகத்தைச் சேர்ந்த 2 காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசின் ‘கேந்திரிய கிருஹ்மந்திரி தக்ஷதா பதக்’ (Kendriya Grihmantri Dakshata Padak) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் இந்த விருதை வழங்கி வருகிறது.

விளம்பரம்:


நாடு முழுவதும் 490 பேருக்கு விருது

2026-ம் ஆண்டுக்கான கேந்திரிய கிருஹ்மந்திரி தக்ஷதா பதக்கம் நாடு முழுவதும் 490 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய ஆயுதப்படைகள் மற்றும் மத்திய காவல் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த விருது காவல்துறையினரின் சிறப்பான செயல்பாடுகள், விசாரணைப் பணிகள், உளவுத்துறை சேவைகள் மற்றும் தடய அறிவியல் துறையில் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.

விளம்பரம்:


எந்தெந்த பணிகளுக்கு விருது?

இந்த விருது முக்கியமாக கீழ்க்கண்ட பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது:

சிறப்பான அதிரடிப் பணிகள்.

குற்ற வழக்குகளில் சிறப்பான புலன் விசாரணை.

உளவுத்துறையில் துணிச்சலான மற்றும் சிறப்பான சேவை.

தடய அறிவியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு.

சிறப்பான செயல்திறன்.

ஆண்டுதோறும் அக்டோபர் 31-ல் அறிவிப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தால் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி இந்த விருது நிறுவப்பட்டது.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31-ம் தேதி ஆண்டுதோறும் இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

காவல்துறையினரின் அர்ப்பணிப்பு, தொழில்முறைத் திறன் மற்றும் சிறப்பான சேவையை அங்கீகரித்து அவர்களை ஊக்குவிப்பதே இந்த விருதின் முக்கிய நோக்கமாகும்.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts