விளம்பரம்:


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ரூ.46.59 கோடியில் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!

பெண்கள் குழந்தைகளுக்கான புதிய சிறப்பு நீதிமன்றங்கள் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ரூ.46.59 கோடியில் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ரூ.46.59 கோடியில் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கச் செய்ய 26 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

26 புதிய நீதிமன்றங்கள் – தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விளம்பரம்:


இதன்படி, மாநிலம் முழுவதும் ரூ.46.59 கோடி செலவில் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள்

இதனிடையே, போதைப்பொருள் தொடர்பான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் 4 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விளம்பரம்:


பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழக அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

முக்கிய தகவல்: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளுக்காக 26 நீதிமன்றங்கள் அமைக்க ரூ.46.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts