விளம்பரம்:


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி காலமானார்!

IMG 20260920 WA0006 நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி காலமானார்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி  காலமானார்!

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி நாராயணசாமி இன்று (செப்டம்பர் 20) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 72.

சாந்தி நாராயணசாமி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா தம்பதியின் மகளாவார். நடிகர்கள் ராம்குமார் மற்றும் பிரபு ஆகியோரின் சகோதரி ஆவார். சிவாஜி கணேசனுக்கு சாந்தி மற்றும் தேன்மொழி என இரண்டு மகள்களும், ராம்குமார் மற்றும் பிரபு என இரண்டு மகன்களும் உள்ளனர்.

விளம்பரம்:


உடல்நலக்குறைவால் சிகிச்சை

சாந்தி நாராயணசாமி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலகில் சோகம்

சிவாஜி கணேசனின் குடும்பத்தில் மூத்த மகளான சாந்தி நாராயணசாமியின் மறைவு அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்:


அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சாந்தி நாராயணசாமியின் மறைவுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts