தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 29) ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட தகவல்கள்:
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதன் காரணமாக தமிழகத்தில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
செப்டம்பர் 3 வரை தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
வெப்பநிலை நிலவரம்:
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை.
ஆனால் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் – இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு.
கடலோர எச்சரிக்கை:
மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல், கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 45–55 கி.மீ. வேகத்தில், இடையிடையே 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
தெற்கு குஜராத், கொங்கன், கோவா, கர்நாடகா, கேரள கடலோரம், லட்சத்தீவு பகுதிகளிலும் 40–50 கி.மீ. வேகத்தில், இடையிடையே 60 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு.
இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மழை பெறும் 8 மாவட்டங்கள் (மதியம் 1 மணி வரை):
தென்காசி
நீலகிரி
கோவை
திண்டுக்கல்
திருநெல்வேலி
கன்னியாகுமரி
திருப்பூர்
தேனி
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.

