முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை குறித்த திரைப்படம் ஒன்று தயாராகிறது.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. படத்தில் அப்துல் கலாமாக, நடிகர் தனுஷ் நடிக்கிறார். இந்தப் படத்தை முன்னணி இயக்குநர் ஓம் ரவுத் இயக்குகிறார்.
இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், இளையத் தலைமுறையினருக்கு இப்படம் புதிய உத்வேகம் அளிக்கும்; அந்த வகையில் படத்தில் கதையைக் கொண்டு சொல்ல விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
பிரபலங்களைப் பற்றி திரைப்படம் எடுப்பது என்பது சாதாரணம் அல்ல; சவாலானது என்று கூறியுள்ள ஓம் ரவுத், படத்தில் எதைச் சொல்கிறோம் என்பதைக் காட்டிலும், எதைச் சொல்லாமல் தவிர்க்கிறோம் என்பதுதான் முக்கியம் என்றார்.
கலாம் எனக்கு வளரும் பருவத்தில் பெரும் உந்து சக்தியாக இருந்தவர். அவரது புத்தகங்கள் எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டன -ஓம் ரவுத்
கலாம் கதாப்பாத்திரத்தை, தனுஷைவிட வேறு யாரும் சிறப்பாக ஏற்று நடித்து விட முடியாது என்றும், தனுஷுடன் பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாகவும் ஓம் ரவுத் கூறியிருக்கிறார்.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.