உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதிபராகப் பதவியேற்க நான் தயார் – ஜே.டி.வான்ஸ் பேட்டி!

ஜே.டி.வான்ஸ்

மெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்பின் வயது 79. அவர் பதவியேற்றதில் இருந்தே பொருளாதாரம் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் கிளம்பின. குறிப்பாக, அவரதுக் கையில் சிராய்ப்புக் காயங்கள் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இதுகுறித்துக் கடந்த மாதமே வெள்ளை மாளிகைத் தரப்பில் இருந்து விளக்கம் தரப்பட்டது.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு டிரம்புக்கு உள்ளதாகவும், கைக் குலுக்கும்போது அவருக்கு லேசான எரிச்சல் ஏற்படுவதாகவும், மற்றபடி பெரியப் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், துணை அதிபராக இருக்கும் ஜே.டி.வான்ஸ், விரைவில் அதிபராகப் பதவியேற்க இருக்கிறார் என்றுகூட தகவல் பரவியது.

இந்த நிலையில் அதுபற்றி அந்நாட்டு ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள ஜே.டி.வான்ஸ், அதிபர் டிரம்ப் ஆரோக்கியமாக உள்ளதாகவும், அவர் அதிபர் பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்வார் என்றும் கூறினார்.

ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், நான் இருக்கிறேன்; நான் அதிபராக பதவியேற்கத் தயாராக இருக்கிறேன் என்றார். நான் பதவியேற்றதில் இருந்து இப்போது வரையிலான, இந்த 200 நாட்களே எனக்குச் சிறந்தப் பயிற்சிக் காலமாக அமைந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

41 வயதே ஆகும் ஜே.டி.வான்ஸ், அமெரிக்காவின் மிகவும் இளம் வயதுடைய துணை அதிபர் ஆவார். அவரது மனைவி உஷா வான்ஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.


Discover more from செய்தி இதழ்

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

உங்கள் கருத்து?