ஒரே அம்பில் கொங்கு மண்டல வாக்குகளை அறுவடை செய்த உதயநிதி ஸ்டாலின் – செந்தில் பாலாஜியின் மாஸ்டர் பிளான்..!

புதிய திராவிட கழகத்தின் வெல்லட்டும் சமூக நீதி – 6வது மாநில மாநாடு கடந்த 30.11.2025 அன்று, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, எழுமாத்தூரில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் தலைமை சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

அமைச்சர் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சரும் மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிய திராவிட கழக நிறுவன தலைவரும், தமிழ்நாடு அரசு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினருமான கே.எஸ்.ராஜ் கவுண்டர் இதற்கு முன் 5 மாநாடுகளை நடத்தி முடித்துள்ளார்.

இந்த மாநாட்டில் சுமார் 30 க்கும் மேற்பட்ட இயக்கங்கள், அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களை மேடையேற்றி இருந்தார். தனது புதிய திராவிட கழகத்தை, கவுண்டர் இன மக்களுக்கு மட்டுமேயான கட்சி என்றில்லாமல் அனைத்து ஜாதிகளுக்குமான இயக்கமாக நடத்தி வருகிறார்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியின மக்களுக்கும் அரசியலில் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்று, கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதி இன மக்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறார். அதன் மூலம் அனைவருக்குமான பிரதிநியாக அறியப்படுகிறார்.

இப்படி, அனைத்து சாதியின மக்களுக்குமான இயக்கமாக புதிய திராவிட கழகம் செயல்பட்டு வருவதையும், இதுவரை 5 மாநாடுகளை சிறப்பாக நடத்தி முடித்து, அனைவரின் ஆதரவையும் பெற்று வருவதையும், மேற்கு மண்டலப் பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி மூலமும், உளவுத்துறை மூலமும் அறிந்து கொண்ட பின்னரே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, இந்த மாநாட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமையை ஏற்று செயல்படக் கூடிய, சுமார் 30 க்கும் மேற்பட்ட பல்வேறு இயக்கங்கள் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களை தனது தனிப்பட்ட ஏற்பாட்டில் மேடையேற்றினார்.

இப்படி தொடர்ந்து சமூக நீதி பற்றி பேசி வருவதாலும், பல்வேறு இயக்கங்கள் அமைப்புகளைச் சேர்ந்த அனைவருடனும் இணைந்து செயல்பட்டு வருவதாலும் தான், மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜியும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை அழைத்து வந்து மாநாட்டை சிறப்பித்திருக்கிறார்.

இதன் மூலம் ஒரே அம்பில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியின மக்களின் வாக்குகளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறுவடை செய்துள்ளார். அதற்கு செந்தில் பாலாஜியும் துணை நின்றுள்ளார்.

கே.எஸ்.ராஜ் கவுண்டர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாடு கொங்கு மண்டலத்தில் மட்டுமில்லாது தமிழகமெங்கும் பேசு பொருளாகியுள்ளது.


மு.உமாபதி


Discover more from செய்தி இதழ்

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

1 Comment

  • புதிய திராவிட கழகத்தின் சமூக நீதி இந்திய அளவில் பேசும் பொருளாகி விட்டது

  • விளம்பரம்:


    செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உங்கள் கருத்து?