2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதையொட்டி அவர், அ.தி.மு.க. தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தின் முக்கிய அம்சங்கள்
-
தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொருத் துறையிலும் அட்டூழியங்கள் நடக்கின்றன; பல நலத் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன; தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
-
வெற்று விளம்பரங்கள், மாயாஜால அறிவிப்புகள் மூலமே ஸ்டாலின் அரசு இயங்குகிறது; அதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
-
2021 தேர்தலில், தி.மு.க. 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளித்திருந்தாலும், அவற்றில் பல முக்கியமானவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
-
“கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து” என்ற வள்ளுவரின் வாக்குப்படி, குடிமக்களை வருத்தும் ஆட்சி, கொலையாளியை விட கொடியது.
-
2026-இல் இந்தத் துயர ஆட்சிக்கு முடிவுரை எழுதி, “அம்மா மாடல் ஆட்சி” மீண்டும் ஏற்படுத்தப்படும்.
-
எழுச்சிப் பயணத்தில் மக்கள் தரும் பேராதரவால் ஸ்டாலினுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது.
-
நான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல நடிக்கவில்லை. நான் மக்களில் ஒருவன்; சாதாரண தொண்டன். முன்கள வீரனாக எனது எழுச்சிப் பயணம் தொடரும்.
-
தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கும் வரை அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் எனக்கும் தூக்கம் இல்லை
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.