பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு ஹரிஷ் கல்யாணின் அடுத்தப்படம் என்ன என்று இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
அதற்கு விடையளிக்கும் வகையில், இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள, டீசல் என்னும் படம் இந்த தீபாவளிக்குத் திரையரங்குகளை அலங்கரிக்க உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, கிடப்பில் கிடந்த இப்படத்தின் டீசர், அண்மையில் வெளியானது. வடசென்னையைப் பின்னணியாகக் கொண்டு, பெட்ரோல்-டீசல் மாஃபியா உலகை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹரீஷ் கல்யாண், ஒரு ஆக்ஷன் ஹீரோவாக ஜொலிப்பார் என்று தெரிகிறது.
A stubborn dream, a genuine effort ❤️🔥
Here’s the #Diesel teaser for you all – https://t.co/LQZMJ6WXkX#DieselDiwali 🎯 pic.twitter.com/TUZdSnh3uM
— Harish Kalyan (@iamharishkalyan) August 27, 2025
இப்படத்தின் இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ். அவரது இசையில் வெளியான பீர் என்று தொடங்கும் பாடல், ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதுல்யா ரவி, வினய் ராய், சாய்குமார், அனன்யா, கருணாஸ், இரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, ஜாகீர் ஹுசைன், சச்சின் கடேகர், கே.பி.ஒய். தீனா, அபூர்வா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதால், டீசல் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
இதே தீபாவளிக்கு, மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் பைசன், விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகியப் படங்களும் வரிசை கட்டியுள்ளன. மேலும் பிரதீப்பின் டூட் என்னும் படமும் அதே வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.