திருப்பரங்குன்றம் மலை தீபம் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கோஷம் எழுப்பிய திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மதுரை விமான நிலையத்தில் போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட விமான நிலையம் வந்தபோது, வழக்கம்போல தொண்டர்கள் கோஷமிட்டனர். அதில் ஒருவர் மட்டும், நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கோஷம் எழுப்பியபடி இருந்ததாக தெரிகிறது. உடனே போலீசார் அவரை தடுக்க முயற்சி செய்து, வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அப்படி அவர் என்ன கோஷம் எழுப்பினார் என்று நிருபர்கள் கேட்டபோது, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத கலவரத்தை தூண்டும் வகையில் தீர்ப்பு உள்ளது” என்று அந்த நபர் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மகன்
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் மகன் அக்ஷய் (22) என்பதும், அவர் டில்லி சட்டக் கல்லூரியில் படிக்கிறார் என்பதும் தெரியவந்தது. பின்னர் பொதுவெளிகளில், சட்டம் சம்பந்தமான கோஷங்களை இடுவது தவறு என்று தெரியாதா என்று அவரை போலீசார் எச்சரித்து விடுவித்தனர்.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.

