தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் ‘ஜனநாயகன்’, வரும் 2026 ஜனவரி 9-ஆம் தேதி grand release ஆக உள்ளது. படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இப்படம் ரிலீஸுக்கு முன்பே ப்ரீ-பிசினஸ் சாதனைகள் உருவாக்கி வருகிறது. இதுவரை நடந்த ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் மட்டும் ₹500 கோடியை கடந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதுவரை, படத்தின் சாட்டிலைட் உரிமை மட்டும் விற்பனை ஆகாமல் இருந்தது. இந்த நிலையில், பெரிய திருப்பமாக Zee நிறுவனம் ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
படத்தின் சாட்டிலைட் உரிமையை ₹40 கோடிக்கு ஜீ நிறுவனம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.

