டிச.9ம் தேதி புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தை நடத்திக்கொள்ள காவல்துறை அனுமதி
கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். QR Code நுழைவுச் சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது.
குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிப்பு
ஈரோட்டில் விஜய் பரப்புரை?
வரும் 16 ஆம் தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் செய்ய தவெக தலைவர் விஜய் திட்டம்
பரப்புரை பயணத்திற்கு அனுமதி கோரி ஈரோடு ஆட்சியர் கந்தசாமியை நேரில் சந்தித்து தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் மனு
ரோடு ஷோ இல்லை
ரோடு ஷோவை தவிர்த்து விஜய்யின் ஈரோடு பரப்புரைக்கு தனியார் திருமண மண்டபத்திற்கு அருகில் இடம் தேர்வு
காவல்துறை அனுமதி கிடைத்த உடன் ஏற்பாடு பணிகள் தொடங்கும் என தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் பேட்டி
கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 23 பேர் உயிரிழப்பு.
கோவா அர்போரா கடற்கரையில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்து.
விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 23 பேர் உயிரிழப்பு.
வார இறுதி நாள் என்பதால் ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில் விபத்து.
பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி; போலீஸ் விசாரணை.
ரயில்களில் தண்ணீர் கொதிக்க வைக்கும் எலக்ட்ரிக் கெட்டில் பயன்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் – தெற்கு ரயில்வே எச்சரிக்கை.
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்திற்கு ரூ.1,259 கோடி அபராதம். டிஜிட்டல் சேவைகள் சட்ட விதிகளை மீறியதாக ‘எக்ஸ்’ நிறுவனத்திற்கு அபராதம் விதித்தது ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம்.
2025ல் கூகுளில் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகளின் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ். 5வது இடத்தில் டெல்லி கேபிடல்ஸும், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முறையே அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
விமானக் கட்டண உச்சவரம்பு தொகை!
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) அனைத்து வழித்தடங்களிலும் தற்காலிகமாக விமானக் கட்டண உச்சவரம்பை (Temporary Fare Ceilings) விதித்துள்ளது.
500 கி.மீ வரையான பயணத் தூரத்திற்கு அதிகபட்ச கட்டணம் 7,500 ஆக நிர்ணயம்
500 கி.மீ முதல் 1000 கி.மீ வரையான பயணத் தூரத்திற்கு அதிகபட்ச கட்டணம் ₹12,000 ஆக நிர்ணயம்
1000 கி.மீ முதல் 1500 கி.மீ வரையான பயணத் தூரத்திற்கு அதிகபட்ச கட்டணம் ₹15,000 ஆக நிர்ணயம்
1500 கி.மீக்கு மேல் உள்ள பயணத் தூரத்திற்கு அதிகபட்ச கட்டணம் ₹18,000 ஆக நிர்ணயம்.
விமானச் சேவைகளில் ஏற்பட்ட தொடர் ரத்து காரணமாக விமானக் கட்டணங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்ததைத் தடுக்கும் வகையில் இந்த உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது மத்திய அரசு.
விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் முழுமையாக சரியாகும்! -இண்டிகோ நிறுவனம்
இண்டிகோ விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் வழக்கம்போல இயங்கும் வகையில் சரிசெய்யப்படும் என அந்நிறுவனம் அறிவிப்பு.
சேவைகள் முழுமையாக சரியாக 2026 பிப்.10 வரை ஆகும் என முன்னர் தெரிவித்திருந்த நிலையில், விரைவில் சரியாகும் என தெரிவிப்பு.
இன்று (டிச.07) மட்டும் சுமார் 650 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கிறது HD Hyundai!
தென்கொரிய கப்பல் கட்டும் நிறுவனமான HD Hyundai, இந்தியாவில் தனது முதல் கப்பல் கட்டும் தளத்தை தூத்துக்குடியில் அமைக்கிறது.
மதுரையில் நடந்த TN Risisng மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்நிறுவனம் தமிழ்நாட்டில் சுமார் ரூ.18,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தகவல்.
இரவுக்குள் REFUND
ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகளின் கட்டணத் தொகையான ரூ.610 கோடி REFUND
மத்திய அரசு விதித்த கெடு இன்று இரவு 8 மணியுடன் நிறைவடையும் நிலையில் இண்டிகோ நிறுவனம் தகவல்
தமிழ்நாட்டை ‘அயோத்தி’ யாக்குவோம் என்கிறார்கள். நாம் மாற்றி யோசிப்போம். தமிழ்நாட்டை போல ‘அயோத்தி’யை மட்டுமல்ல, இந்தியாவையே மாற்றுவோம்.
அன்பு, சமாதானம், முன்னேற்றம், ஒற்றுமை, விழிப்புணர்வு பூத்துக் குலுங்க வேண்டும். அதில் மனிதம் வாழ வேண்டும்.
-தமிமுன் அன்சாரி, மஜக தலைவர்
சிக்ஸர் அடிப்போம்!
திருப்பரங்குன்றம் விஷயத்தில் சிலர் அரசியல் லாபங்களுக்காக துண்டாட சதி செய்கின்றனர். வளர்ச்சி திட்டங்களை சகித்து கொள்ள முடியாமல் சிலர் இவ்வாறு செயல்படுகின்றனர்.
மதுரை மக்களுக்கு அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியும். எப்படி பந்து போட்டாலும் சிக்ஸர் அடிப்போம்
-மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
சொத்துக்கள் முடக்கம்
தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின் 1,120 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.
யெஸ் வங்கி தொடர்பான மோசடி வழக்கில் நடவடிக்கை. இந்த வழக்கில் இதுவரை, ரூ.10,000 கோடிக்கு மேலான அனில் அம்பானி குழும சொத்துக்கள் முடக்கம்.
தமிழ்நாடு அயோத்தியாக மாறும் என்ற நயினார் நாகேந்திரனின் கனவு பகல் கனவாக தான் இருக்கும்,
இந்த மண் திராவிட மண், ராமானுஜர் மண் இங்கு மத ஒற்றுமை காக்கப்படும்
-அமைச்சர் சேகர் பாபு
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிப்பு
நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை
பாமகவின் அனைத்து நிலை நிர்வாகிகளுடன் பாமக தலைவர் விவகாரம் தொடர்பாக அன்புமணி நாளை மறுநாள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்
சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்
சிறுத்தை தாக்கி குழந்தை பலி.
கோவை வால்பாறையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் 5 வயது குழந்தை, சிறுத்தை தாக்கியதில் பலி.
குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியான விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவு.
இந்த கடிதத்தை இணைத்து பல்வேறு குற்ற வழக்குகள் கொண்ட ஆதிநாராயணன் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த கடிதம் எப்படி கிடைத்தது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டதாக காவல்துறை தரப்பில், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இக்கடிதத்தை வெளியிட்டிருக்கலாம் என்ற தகவலை தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம்.
மெட்ரோ வாட்டர் கட்டணம் உயர்வு
சென்னையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு லாரிகள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் கட்டணத்தை உயர்த்தியது மெட்ரோ வாட்டர் நிறுவனம்.
குடியிருப்பு பயன்பாட்டு லாரிகள்
6,000 லி., ரூ.475ல் இருந்து ரூ.550 ஆக உயர்வு
9,000 லி., ரூ.700ல் இருந்து ரூ.825 ஆக உயர்வு
வணிக பயன்பாட்டு லாரிகள்
6,000 லி., ரூ.735ல் இருந்து ரூ.1025 ஆக உயர்வு
9,000 லி., ரூ.1050ல் இருந்து ரூ.1535 ஆக உயர்வு
12,000, 18,000 லி., லாரி குடிநீரின் விலையில் மாற்றம் இல்லை.
பணி நேரத்திற்குப் பிறகு மற்றும் விடுமுறை நாட்களில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பணி சார்ந்த அழைப்புகள், மின்னஞ்சல்கள் அனுப்பக் கூடாது என தனிநபர் மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்தார் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே.
இத்தகைய அழைப்புகளை நிராகரிப்பதற்கு ஊழியர்களுக்கு உரிமை உள்ளது என மசோதாவில் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும் தனிநபர் மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைக்காது என்பதால் நிறைவேறாது. இதனால் இது சட்டமாகும் வாய்ப்பு குறைவு.
சொத்தில் 90% ஏழுமலையானுக்கு எழுதிக் கொடுத்துவிட்டேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்”
திருட்டு புகாரில் சிக்கிய தேவஸ்தான முன்னாள் ஊழியர் ரவிக்குமார்
பீகாரில் திருப்பதி ஏழுமலையான் கோயில்..!
பீகார் தலைநகர் பாட்னாவில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது அம்மாநில அரசு.
99 ஆண்டுகளுக்கு வெறும் ரூ.1 என்ற குத்தகை வாடகையுடன் இந்த நிலத்தை வழங்க முடிவு.
பாமக விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு முடிவு செய்யும் அதிகாரம் இல்லை- டெல்லி உயர்நீதிமன்றம்.
அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் கோஷ்டி பூசல் விவகாரங்களை சிவில் நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் கடிதத்துக்கு சட்டரீதியான அங்கீகாரம் இல்லை-டெல்லி உயர்நீதிமன்றம்.
அன்புமணி நடத்திய கூட்டம் முறையானாதா என்பதை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது.
பாமக தலைவர் பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
முப்படை வீரர்களின் வீரத்தைப் போற்றிடும் வகையிலும், போரில் தியாகம் புரிந்த வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் உதவிடும் வகையிலும், கொடிநாள் நிதிக்கான நன்கொடை அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தாயகம் காக்கத் தன்னலம் மறந்து பணியாற்றும் முப்படை வீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ArmedForcesFlagDay-வில் நாட்டு மக்களின் சார்பில் எனது வணக்கங்கள்! மக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாக வாழ, உயிரைத் துச்சமாக எண்ணி, கடுமையான சூழல்களில் கண்ணுறங்காமல் காவல் காக்கும் படைவீரர்களின் பணி ஈடு இணையற்றது. தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும் அவர்களின் குடும்ப நலனுக்காகவும் கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களான நம் அனைவரின் கடமை! -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நீதிமன்ற எழுத்தர் வீட்டில் 45 சவரன் கொள்ளை
அரியலூர், ஜெயங்கொண்டம் அருகே நீதிமன்ற தலைமை எழுத்தர் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.45 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
கொள்ளையர்கள் குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை
கல்லூரிகளில் 3வது மொழியை கட்டாயப்படுத்துவது மாநிலங்களின் உரிமையை புறக்கணிக்கும் செயல்
NEP மூலம் கல்லூரிகளில் 3வது மொழியை கட்டாயப்படுத்துவது, மறைமுகமாக திணிக்க முயல்வது மாநில உரிமையை புறக்கணிக்கும் செயல்.
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையே கல்வி, சமத்துவம், சமூகநீதியை காக்கும் வழி.
-தமிழச்சி தங்கபாண்டியன்.
பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.
2015இல் விக்கிரப்பாண்டியத்தில் ஓஎன்ஜிசி சொத்துகளை சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன் மீது வழக்கு
2025 ஆண்டின் வருடாந்திர ட்ரெண்டிங் பட்டியலை வெளியிட்டுள்ளது கூகுள்!
அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக IPL இருந்துள்ளது. கூகுள் ஜெமினி, ஆசிய கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி, ப்ரோ கபடி லீக் ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன
2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது இட்லி!
Pornstar மார்டினி, மொடாக், தேகா, உகாடி பச்சடி, பீட்ரூட் கஞ்சி, திருவாதிரை களி, Yorkshire புடிங், கோண்ட் கடிரா, கொழுக்கட்டை ஆகியவை டாப் 10 இடங்களில் உள்ளன
45 வயதான பெண்களுக்கு லோயர் பெர்த் வசதி!
ரயில் டிக்கெட் முன்பதிவின்போது 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விருப்பத் தேர்வாக ‘லோயர் பெர்த்’-ஐ தேர்வு செய்யாவிட்டாலும், அவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும் வகையில் நடவடிக்கை.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு.
இந்தோனேசியா: 908 பேர் பலி
இந்தோனேசியாவில் ‘சென்யார்’ புயலால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 908ஆக உயர்வு, 410 பேர் மாயம் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
7.90 சதவீதம்
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி குறைப்பால், அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதத்தை 8.15 சதவீதத்திலிருந்து 7.90 சதவீதமாக குறைத்தது பேங்க் ஆப் பரோடா.
வார்னர் ப்ரதர்ஸ் விற்பனை!
உலக புகழ்பெற்ற WARNER BROS. நிறுவனத்தை ரூ.7.44 லட்சம் கோடிக்கு வாங்கியது NETFLIX. அந்நிறுவனத்தின் ஸ்டூடியோக்கள், HBO MAX OTT தளம் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். அடுத்த 12-18 மாதங்களில் ஒப்பந்தத் தொகை கைமாற்றப்படும் என NETFLIX தெரிவித்துள்ளது.
பெனின் நாட்டில் ராணுவப் புரட்சி?
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் நாட்டில் அரசு ஊடகத்தை கைப்பற்றி, அதிபர் பத்ரிக் தாலோனை பதவியில் இருந்து நீக்கி ஆட்சியை பிடித்ததாக அறிவித்த ராணுவ கிளர்ச்சி குழுவால் பரபரப்பு.
இந்நிலையில், ராணுவ கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ராணுவப் படைகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. குழப்பம் நீடிக்கிறது.
உலகின் மிக நீளமான விமானப் பயணம்!
உலகின் மிக நீளமான பயணிகள் விமானப் பயணத்தை அறிமுகம் செய்துள்ளது சீனாவின் China Eastern Airlines நிறுவனம்.
ஷாங்காய் முதல் அர்ஜென்டினாவின் புவெனஸ் ஐரிஸ் நகரம் வரை மொத்தம் 29 மணி நேரம் நீடிக்கும் 19,681 கி.மீ. தூரம் இந்த விமானம் பறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் மிகப்பெரிய புதிய தூதரக கட்டடத்தை திறந்தது இந்தியா!
2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு சீனா உடன் மீண்டும் உறவை வலுப்படுத்தி வரும் இந்தியா, ஷாங்காய் நகரில் மிகப்பெரிய புதிய தூதரக கட்டடத்தை திறந்துள்ளது.
ஷாங்காயில் 1950 முதல் இந்திய தூதரகம் செயல்பட்டு வருகிறது.
ஃபேன்சி நம்பரால் ஃபேமஸ் ஆனவருக்கு வந்த சோதனை!
ஹரியானாவில் ‘HR88B8888’ என்ற ஃபேன்சி பதிவு எண்ணை ரூ.1.17 கோடிக்கு ஏலம் எடுத்து பிரபலமான சுதிர் குமார், காலக்கெடுவுக்குள் அந்த தொகையை செலுத்த தவறியதால், அவரின் சொத்துக்கள், வருமானத்தை முழுமையாக விசாரிக்க அம்மாநில அரசு முடிவு!
அந்த எண் மீண்டும் ஏலம் விடப்படும் எனவும், ஏலத்தில் பங்கேற்பது ஒரு பொழுதுபோக்கு அல்ல, பொறுப்புணர்வு வேண்டும் எனவும் அம்மாநில அரசு கண்டித்துள்ளது.
புதிய விண்மீன் கூட்டம்!
இந்திய விஞ்ஞானிகள் நமது பால்வீதியை (Milkyway Galaxy) போலவே, ஒரு புதிய சுழல் விண்மீன் கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.
Alaknanda என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்மீன் கூட்டம், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி உதவியுடன் கண்டுபிடிப்பு. பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ஆராய்ச்சிக்கு இது உதவும் என கூறப்படுகிறது.