சுதந்திர இந்திய வரலாற்றில், ஒரே மாநிலத்தின் முதல்வராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபராக பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை லண்டன் World Book of Records அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற பீஹார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வெற்றி பெற்றதை அடுத்து, ஐக்கிய ஜனதா தள (JDU) தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
உலக சாதனை அங்கீகாரம்
நிதிஷ் குமார் உருவாக்கிய இந்த வரலாற்றுச் சாதனைக்காக, லண்டனில் உள்ள World Book of Records, “சுதந்திர இந்தியாவில் ஒரு மாநில முதல்வராக 10 முறை பதவியேற்ற ஒரே தலைவர்” என்று அவரை உலக சாதனைக் புத்தகத்தில் பதிவு செய்துள்ளது.
இந்த தகவலை JDU-வின் தேசிய செயல் தலைவர் சஞ்ஜய் குமார் ஜா தனது எக்ஸ் (Twitter) பதிவில் வெளியிட்டார்.
பீஹாருக்கு பெருமைமிகு தருணம்
சஞ்ஜய் குமார் ஜா பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
10வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள நிதிஷ் குமார் அடைந்த இந்த மைல்கல்லை World Book of Records அங்கீகரித்துள்ளது பெரும் பெருமை.
இது அவரது உறுதியான பொது சேவைக்கும், நிலையான நிர்வாகத்திற்கும், பீஹார் மக்களின் நம்பிக்கைக்கும் பிரதிபலிப்பு.
பத்து முறை ஒரு மாநிலத்தை வழிநடத்துவது தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, பீஹாரின் ஜனநாயக வலிமைக்கும் ஒரு சான்று.
19 ஆண்டுகள் முதல்வராக — இந்திய ரேங்கில் 8வது இடம்
நிதிஷ் குமார் இதுவரை 19 ஆண்டுகளுக்கும் மேலாக பீஹார் முதல்வராக பதவி வகித்துள்ளார். இந்தியாவில் அதிக காலம் முதல்வராக பணியாற்றிய தலைவர்களின் பட்டியலில் அவர் தற்போது 8வது இடத்தில் உள்ளார்.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.

