உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது: சசி தரூர்

புதுடில்லி:

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

ஷ்யாவில் இருந்து யுரேனியம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியா மீது வரி விதித்து இரட்டை வேடம் போடுகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் கூறியதாவது: டிரம்ப்பின் அறிவிப்பு நமக்கு நல்ல செய்தி அல்ல. இந்தியாவுக்கான வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. நமது பொருட்களின் விலை அமெரிக்காவில் நிறைய பேருக்கு கட்டுப்படியாகாது. நமது போட்டியாளர்கள் சிலருக்கு விதிக்கப்படும் வரிகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் நம்மை விட குறைவான வரிகளை கொண்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள மக்கள் வேறு இடங்களில் மலிவான பொருட்களை வாங்க முடிந்தால் இந்தியாவிடம் இருந்து பொருட்களை வாங்க மாட்டார்கள் என்று நான் பயப்படுகிறேன்.

அமெரிக்காவிற்கான நமது ஏற்றுமதிக்கு அது நல்லது அல்ல. ஆர்வமுள்ள பிற நாடுகளுக்கும், பிற சந்தைகளுக்கும் நாம் தீவிரமாக சந்தைப்படுத்த வேண்டும். இப்போது பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. ஐரோப்பிய யூனியனுடன் பேசுகிறோம். பலநாடுகளில் நம்மால் முடியும் என்று நம்புகிறோம். ஆனால், குறுகிய காலத்திற்கு இது பின்னடைவு தான்.

யுரேனியம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. நிச்சயம் இது இரட்டை வேடம் தான். சீனாவுக்கு 90 நாட்கள் அவகாசம் தருகிறது. ஆனால், நம்மை விட சீனா அதிகளவு ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இது நம்மீது நல்லெண்ணம் கொண்டதாக நாம் நினைத்த ஒரு நாட்டிடம் இருந்து நல்லெண்ணம் கொண்டதாக நாம் நினைத்த ஒரு நிர்வாகத்திடம் இருந்து நட்புரீதியிலான சமிக்ஞையாக இல்லை.

நிச்சயமாக நாம் அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது அனுபவங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரிகளை விதிக்க இந்தியாவுக்கு இப்போது ஒரு அழுத்தம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த சூழ்நிலைகளில் நாம் மற்ற வர்த்தக கூட்டாளிகளை இன்னும் அதிகமாக கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Discover more from செய்தி இதழ்

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

உங்கள் கருத்து?